தன் முன்னிருக்கும் தடைகள் அனைத்தையும் உடைத்து , எதிர்த்து நிற்பவர்களுக்கு முரணாய் , மாணவச் செல்வங்களுக்கு அரணாய் விளங்கி போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன் ,

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி அகில உலகையும் வியக்க வைத்து எண்ணிலடங்கா உணர்வுகளையும் உண்மைகளையும் தன்னுள் வைத்து அன்றும் இன்றும் என்றும் அழியாத சிறப்புகளை கொண்டுள்ள என் உயிர் தமிழ் மொழியினை கண்டு வியந்து போகும் நான் கருப்புச்சாமி ராஜா .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

என்று இந்த ஒரு நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த இறைவனை வணங்கி வரவேற்று எனது பணியை தூவங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன். தன் நலன் மறந்து தன் உள்ளம் துறந்து தாக்கங்கள் தெரிந்து தன்மைகள் அறிந்து தன்னிடம் உள்ளவர்களை தட்டிக்கொடுக்கும் உன்னத தலைமை பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கி தார்மிக அன்பால் தாலாட்டும் எமது கல்லூரியின் தாளாளர் திருமிகு பி சச்சிதானந்தம் ஐயா அவர்களை விதை நிறைவு விழாவிற்கு வருக வருக என வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ....!

என்று கர்வத்தோடு எங்களையெல்லாம் வழிநடத்தும் எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமிகு வி பாலுசாமி ஐயா அவர்களையும் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாணவர் நலன் திருமிகு கா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களையும் வருக வருக என வரவேற்பதில் அளவற்ற இன்பம் பெறுகிறேன்...!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்

என்ற குறளுக்கு ஏற்ப, சக்ரவ்யூகத்தை கையாளுவதில் சிறந்த அர்ஜுனனை போல..! கொடை என்று சொன்னாலும் , தர்மம் என்று சொன்னாலும் சிந்தையில் எழும் கர்ணனை போல…!தலைமை வகுப்பதில் சிறந்த பீஷ்மரை போல..! என் மாணவனாக இருப்பின் அவன் தரணியாழ்பவனே.. என்ற கர்வத்தையுடைய துரோணரை போல….! எங்களை தலைமை தாங்கி செவ்வனே வழிநடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க, பேராசிரிய பெருமக்கள் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் இந்த அடியேன் அளவற்ற ஆனந்தம் அடைகிறேன்...!

பிறரது சொற்களிலிருந்து ஏதாவது நீ கற்க நேர்ந்தால் அந்த அனுபவத்தை நீ ஏற்கனவே பெற்றுள்ளாய் என்பதை தெரிந்து கொள் எனின் அனுபவம் தான் ஒரே ஆசிரியர் என்று கூறியது மட்டுமல்லாமல் மரணம் உன்னை விட பெரிது தான் ஆனாலும் அது உன்னை ஒரே ஒருமுறை தான் வெல்ல முடியும் ஆனால் நீ வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை வென்று கொண்டே இருக்கிறாய் என்பதை மறந்து விடாதே என்று நாங்கள் கல்லூரியும் பயணிக்கும் அனுதினமும் ஒவ்வொரு செயல்களிலும் ஆசிரியர்களுக்கும் எங்களுக்கும் துணையாக இருக்கக் கூடிய ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் அளவற்ற மகிழ்வடைகிறேன்

தொட்டனைத்து ஊறும் மலர்க்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு

வள்ளுவனின் வாய் மொழிக்கு ஏற்ப , தினந்தோறும் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்வதன் நோக்கத்தை முதன்மையாக்கி , கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று தான் கற்ற தூய்மையான கல்வியின் வழியில் நடக்கக்கூடிய மாணவச் செல்வங்களாகிய பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை வருக வருக என வரவேற்பதில் தேனமுது தமிழ் போல் தித்தித்து மகிழ்கிறேன்.

உதிர்ந்த நம்வாழ்வின் உன்னத நொடிகளாய் பள்ளி இருக்க...

விரிந்திருக்கும் மொட்டுக்களாய் கல்லூரி இதோ...

பள்ளி அறை கண்ட உங்கள் பாதங்கள் கனவுகளை எதிர்நோக்கி கல்லூரியில் கால்பதிக்க

அறிமுகம் இல்லா முகங்கள் இங்கு முகவரிகள் தேடும் நான்கு வருட பயணம் இது.....

அதைத்தொடர்ந்து இனிய வாழ்க்கை பயணம் அது…

இங்கு பயணிகள் பல....

தேடல்கள் பல....

வழிகாட்டிகள் பல....

போட்டிகள் பல....

தோல்விகளும் பல....