மலர்ந்த நம்வாழ்வின்உன்னத நொடிகளாய் பள்ளி இருக்க…!விரிந்திருக்கும் மொட்டுக்களாய் கல்லூரி இதோ…!
பள்ளி அறை கண்ட உங்கள் பாதங்கள் கனவுகளை எதிர்நோக்கி கல்லூரியில் கால்பதிக்க
அறிமுகம் இல்லா முகங்கள் இங்கு முகவரிகள் தேடும் நான்கு வருட பயணம் இது.....!
அதைத் தொடர்ந்த இனிய வாழ்க்கை பயணம் அது…
இங்கு பயணிகள் பல....
தேடல்கள் பல....
வழிகாட்டிகள் பல....
போட்டிகள் பல....
தோல்விகளும் பல....
வெற்றிகளும் பல....
தேடல்களை தேடித் திரிந்து வழிகாட்டிகளின் தோழமை கொண்டு போட்டி என்னும் போர்க்களம் கண்டு தடை களை தாண்டி காவியம் படைத்திட வரவேற்கிறோம்…!
இந்த அழகிய காலைப் பொழுதில் இந்த ஒரு நிகழ்வை சிறப்பிக்க வருகை தந்து இருக்கக்கூடிய கொங்கு வெள்ளாளர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு E.R கார்த்திகேயன் ஐயா அவர்களையும் , கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு P சச்சிதானந்தன் ஐயா அவர்களையும் , முதல்வர் முனைவர் V பாலுசாமி ஐயா அவர்களையும் , மாணவர் நலன் காப்பாளர் முனைவர் K கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களையும் , நிகழ்வின் முக்கிய தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய முனைவர் R மஞ்சுளாதேவி , முனிவர் M ராமலிங்கம் அவர்களையும் , நிகழ்வை சிறப்பிக்க வந்துள்ள சிறப்பு விருந்தினர்களையும் வருக வருக என வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இதோடு மட்டுமன்று இந்த ஒரு நிகழ்வில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் களையும், மற்றும் அனைத்து துறைகளின் தலைமை ஆசிரியர்களையும், ஏனைய பிற ஆசிரியர்களையும் , மாணவ நண்பர்களையும் மற்றும் ஊடகத்துறை நண்பர்களையும் வருக வருக என வரவேற்பதில் அகமகிழ்ந்த மகிழ்வடைகிறோம் .
உதிரத்தில் நிறைந்திட்டாய் உணர்வுகளின் ஊற்றெடுத்தாய் ஆதி அழகு ழகரத்தால் அன்னையாய் நீ அணிசெய்தாய் மதிப்புடனே உன்னைப்போற்றி வழத்திடவே எழுந்து நிற்போம் - தமிழ்த்தாய் வாழ்த்து
பழமைமாற புதுமையாம் பைந்தமிழரின் பெருமையாம் ஒளி வடிவில் இன்பம் துவங்கிட “ அவையில் இருக்கும் சான்றோரை குத்துவிளக்கு ஏற்றிட அழைக்குறோம் “ தன் நலன் மறந்து தன் உள்ளம் துறந்து தாக்கங்கள் தெரிந்து தன்மைகள் அறிந்து தன்னிடம் உள்ளவர்களை தட்டிக்கொடுக்கும் உன்னத தலைமை பண்பை கொண்ட தாளாளர் திரு P சச்சிதானந்தம் ஐயா அவர்களை தலைமையுரை வழங்க அன்போடு அழைக்கிறோம் ....!
சிப்பியினுள் மறைந்திருக்கும் முத்தாய்...
சிற்பி செதுக்கும் கல்லினுள் சிலையாய்...
கற்பிக்கும் வைரவர்களின் உட்பொருளாய்...
கற்களும் சுவையூட்டும் கற்கண்டாய்....
இவர் எச்சூழ்நிலையிலும் நம்முடன் இருக்கும் பொருளாளர் திரு E.R கார்த்திகேயன் ஐயா அவர்களை சிறப்புரை ஆற்ற அன்போடு அழைக்கிறோம் ....!
வீதி தோறும் அழகாய் ஆடித்திரிந்து
விதிவிடுத்து பொறியியல் பயின்று
மதி தன்னை/அதை உலகறியச் செய்ய